ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2025, 4:36 pm

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்,

இதையும் படியுங்க: நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் : திருச்சி சிவா எம்.பி எச்சரிக்கை!

இந்நிலையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சுவாமி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஊழியர்களுக்கு தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதை அடுத்து ஏழாவது வார்டு கவுன்சிலர் சாந்தி தங்களது பகுதியில் இதுவரை 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்களது பகுதிகளில் கழிப்பிட வசதி அடிப்படை வசதி குப்பைகள் கொட்டப்படும் இடம் தூர்வாரப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

DMK female councilor stages dharna against DMK MP

பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சுவாமி தங்களது பகுதிக்கு வந்து ஆய்வு செய்து மீதமுள்ள நிதி ஒதுக்க வேண்டுமென திமுக பெண் கவுன்சிலர் சாலையில் அமர்ந்து தர்ணா பரபரப்பு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!