கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!!

Author: Udayachandran
29 July 2021, 8:13 pm
SP vElumani Criticize Dmk -Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டம் திமுக அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கோவை தெற்கு வடக்கு உட்பட அவிநாசி, சிங்காநல்லூர் பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி உட்பட 9 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து மனு அளித்தனர்.

அதற்குப் பிறகு எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வளர்ச்சிப்பணி, கொரோனா தடுப்பு பணிகள் ஆகியவை பேரூராட்சி, ஊராட்சியில் கூடுதலாக வழங்கப்பட வேண்டும். வழங்குவதில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.

பல்வேறு நேரங்களில் அதிமுக பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். அரசு நிகழ்ச்சிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக பிரதிநிதிகள் ஊராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அழைக்கப்படுவதில்லை. திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள்.

திமுகவில் வெற்றி பெறாத கட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு சிலர் அரசு விழாக்களில் கலந்து கொண்டு பூமி பூஜையில் கலந்துகொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போல செயல்படுகிறார்கள்.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போது கோவையில் பல்வேறு விதமான பாலங்கள் உட்பட வேலைகளுக்கு டெண்டர் கோரப்பட்டு நடைபெற்று வந்தது. இப்பொழுது அந்த வேலையைப் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிகிறோம்.

ஆங்காங்கே மழை பெய்யும் பொழுது அதனால் ஏற்பட்ட குழிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு இரு சக்கர வாகனத்தில் செல்லக்கூடியவர்கள் விழுந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. அனைத்து சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் குடிநீர் திட்டம் குடிநீர் குழாய் அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு இப்பொழுது பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருப்பதால் அடிக்கடி விபத்துக்கு நடைபெறுகிறது.

மழை காரணமாக கோவையில் நீர்நிலைகளை சேமிப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு குளங்கள் ஏரிகள் அகலப்படுத்தப்பட்டு இருந்தது. அதனால் இப்பொழுது மழைக்காலம் என்பதால் நீரை சேமிப்பதற்கு உடனடியாக திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் அமைச்சராக இருக்கும் பொழுது கோவை மாவட்டத்தில் தொடர்ந்து ஒவ்வொரு துறையைச் சேர்ந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வந்தது. கோவையில் ஆய்வு பணிகளை ஆய்வு கூட்டம் நடைபெறுவது கிடையாது. அதனால் தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு கோயம்புத்தூரில் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்.

மொத்தத்தில் கோயம்புத்தூர் திமுக அரசால் புறக்கணிக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. வாக்களித்த மக்கள் அனைவரும் இவ்வாறாகவே யோசிக்கின்றனர்.

தடுப்பூசிகள் அந்தந்த பகுதிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் பொழுது அதை செயல்படுத்தக் கூடிய அதிகாரிகள் அதில் முறைகேடுகள் செய்து அதை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடிய சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதையும் திமுக தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 177

0

0