திமுகவின் முக்கிய நிர்வாகி திடீர் மரணம் : அதிர்ச்சியில் தலைமைக் கழகம்…!!!

1 March 2021, 7:28 pm
anna arivalayam- updatenews360
Quick Share

திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், திருப்பனந்தாள் முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான ரவிச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோ. ரவிச்சந்திரன் (60). 25 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பனந்தாள் ஒன்றியக் குழு தலைவராக இருந்த அவர், திமுக செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தற்போது, திருப்பனந்தாள் ஒன்றிய குழு தலைவராக இவரது மனைவி பொறுப்பு வகிக்கிறார்.

இவரது அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கைகளினால் திமுக தலைமை கோ. ரவிச்சந்திரன் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்டத்தில் திமுகவை கால் ஊன்ற வைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

Dmk executive dead - updatenews360

அதேவேளையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கோ. ரவிச்சந்திரன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரில் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கோ. ரவிச்சந்திரனின் மறைவு டெல்டா மாவட்ட திமுகவினர் மட்டுமின்றி, தலைமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 393

0

0