பொய் கூறுவதில் திமுக வல்லவர்கள்.. பொய் சொல்லியே ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர்கள் : ஈ.பி.எஸ் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2021, 7:13 pm
Edappadi palanisamy - Updatenews360
Quick Share

நெல்லை : ஏற்கனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய ஊரக உள்ளாட்சி தேர்தல் திமுக நீதிமன்றத்துக்குச் சென்றதால் தான் நிறுத்தி வைக்கப்பட்டது என்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தவும் திமுக நீதிமன்றத்தில் வாய்தா கேட்டு வருவதாக ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை ஹைக் கிரவுண்ட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்திருக்க வேண்டும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் தான் இப்போது தேர்தல் நடத்தப்படுகிறது.

திமுக நீதிமன்றத்திற்கு சென்றதால் தான் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. நகர்ப்புற தேர்தலை நடத்த திமுக தற்போது நீதிமன்றத்தில் வாய்தா கேட்டு வருவதாகவும் தெரிவித்தார் . தேர்தலுக்காக அஞ்சும் கட்சி அதிமுக இல்லை, தமிழகத்தில் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுகதான்.

நல்ல பல திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்ததன் காரணமாகத்தான் இப்போது தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கல்வித் துறையில் அனைத்து நிலைகளிலும் தமிழகம் உயர்ந்திருக்க காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தான் .

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்து சாதனை படைத்தது அதிமுக ஆட்சியில்தான். கல்வித்துறையில் 2030 இல் அடைய வேண்டிய இலக்கை அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களால் இப்போதே அடைந்து உள்ளது.

அதிமுக எந்த சாதனையையும் படைக்க வில்லை என தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லி வருகிறார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல நல்ல திட்டங்கள் தான் தமிழகம் இன்று வீறுநடை போட்டுக் கொண்டு இருக்கிறது.

அதிமுகவை பார்த்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரிகளில் முதல்வர் ஸ்டாலின் செய்து கொடுத்திருப்பதாகவும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்க்கட்சியினரே வரவேற்று வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

அறிவித்த தேர்தல் வாக்குறுதி எதையும் திமுக அரசு செய்யவில்லை, பெட்ரோல் டீசல் விலையை பெயரளவிற்கு மட்டும் குறைத்துவிட்டு மத்திய அரசை திமுகவினர் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

திமுகவினர் பேச்சைக் கேட்டு மயங்கி அதிமுகவைச் சேர்ந்த 8 பேர் இங்கிருந்து பிரிந்து சென்று திமுகவில் அமைச்சராகி இருக்கிறார்கள். தேசியமயமாக்கல் வங்கியில் பெற்ற நகைக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்தனர். ஆனால் அதனை செய்யவில்லை. முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என சொன்னார்கள். அதையும் செய்யவில்லை.

High Court orders truce between TN CM and MK Stalin - The Federal

முதியோரையும் ஏமாற்றி வாக்குகளைப் பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக தற்போது இருக்கிறார். திமுகவினர் பொய் சொல்வதில் வல்லவர்கள் பொய் சொல்லி வாக்குறுதி அளித்து ஆட்சியில் இப்போது அமர்ந்திருக்கிறார்கள்.

உள்ளாட்சித் துறையால் மட்டும்தான் மக்களின் அனைத்து அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் ஒரு வாக்கு தான் வேட்பாளரின் வெற்றியும் தோல்வியும் நிர்ணயம் செய்கிறது .

Stalin visits Tamil Nadu CM Edappadi K Palaniswami, pays respects to his  mother | Deccan Herald

உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றால்தான் கட்சியின் பலத்தை நிரூபிக்க முடியும் எனவே ஒன்றுபட்டு அனைவரும் பாடுபட வேண்டும். ஒரு வாக்கினை கூட விட்டுவிடாமல் கட்சி நிர்வாகிகள் களத்தில் கடுமையாக பணியாற்றி வெற்றியை தேடித் தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Views: - 226

0

0