ரேஸில் முதல் ஆளாக குதித்த திமுக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : வேட்பாளர் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2024, 2:16 pm

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

இதையடுத்து வேட்பாளர்களை தேர்வு பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டன. இதனிடையே, இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அன்னியூர் சிவா தி.மு.க.வின் விவசாய தொழிலாளர் அணியின் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!