திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ‘திடீர்‘ கொரோனா பரிசோதனை : வெளியான முக்கிய தகவல்!!

30 September 2020, 10:30 am
Stalin DMK- updatenews360
Quick Share

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இதையடுத்து பெங்களூரு சென்ற தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இது குறித்து தினேஷ் குண்டுராவ் தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தினார்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் ஸ்டாலினுக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வெளியாகியுள்ளது.