தேநீர் கடை நடத்தி வரும் பெண்ணை ஆபாசமாக திட்டி தாக்கிய திமுக பிரமுகர் : வைரலாகும் ஷாக் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2023, 10:00 pm
DMk Video -Updatenews360
Quick Share

தேநீர் கடை நடத்தி வரும் பெண்ணை ஆபாசமாக திட்டி தாக்கிய திமுக பிரமுகர் : வைரலாகும் ஷாக் வீடியோ!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டினம் புறவழிச் சாலையில் முருகன் என்பவரது மனைவி கபிலா என்பவர் டீக்கடை மற்றும் குளிர்பானம் ஆகியவை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த கடையை ஒட்டியவாறு திமுக மாவட்ட பிரதிநிதி நாகராஜ் என்பவர் ஓட்டல் கடை ஒன்றை வைத்துள்ளார். இந்த ஓட்டல் கடையின் முன்பு டீகடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதாகவும் இதுதொடர்பாக பலமுறை இருவருக்குமிடையே தகராறு இருந்துவந்தாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஓட்டல் கடைக்கு முன்னர் அங்கு வந்த பொதுமக்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு டீகுடிக்க சென்றதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திமுக மாவட்ட பிரதிநிதி நாகராஜ் கபிலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

மேலும் இதுதொடர்பாக கபிலா காவேரிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

திமுக மாவட்ட பிரதி நாகராஜ் கபிலன் உணவகத்திற்குள் நுழைந்து அவரை ஆபாச வார்த்தையில் பேசுவது தாக்குவதும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் அடிப்படையில் காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 115

0

0