தங்களை எதிர்ப்பவர்களை ஆபாசமாக விமர்சிப்பதை கலாச்சாரமாக கொண்டு வந்தது திமுக : வானதி சீனிவாசன் ‘பளார்’!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2022, 4:26 pm
Vanathi - Updatenews360
Quick Share

தங்களை எதிர்ப்பவர்களை நாகரிகமின்றி ஆபாசமாக விமர்சிப்பதை தமிழகத்தில் ஓர் அரசியல் கலாச்சாரமாக புகுத்தியவர்கள் திமுகவினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “திமுக என்ற நச்சு மரத்தை, ‘வளர்ச்சி’, ‘தேச ஒற்றுமை’ கோடாரி கொண்டு பாஜக வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தங்களை எதிர்ப்பவர்களை நாகரிகமின்றி ஆபாசமாக விமர்சிப்பதை தமிழகத்தில் ஓர் அரசியல் கலாச்சாரமாக புகுத்தியவர்கள் திமுகவினர் என்பது அனைவருக்கும் தெரியும்.

பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து, இந்த வன்முறை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையை பயன்படுத்துங்கள் இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என கூறினார்.

Views: - 365

0

0