பீர் பாட்டில் வைத்து திமுக கூட்டம்.. அதிமுக கூட்டம் அப்படியல்ல : செல்லூர் ராஜூ நறுக்!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2025, 1:25 pm
முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக மாநில தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: என்கிட்ட ஏன் கேட்கறீங்க…போய் ப.சிதம்பரத்திடம் கேளுங்க : நிருபர்களிடம் கோபப்பட்ட அமைச்சர் கேஎன் நேரு!
இந்த நிகழ்வை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு பேசுகையில், கிடாவெட்டி, கறி போட்டு பிரியாணி போட்டு நடத்துற கூட்டம் அல்ல இந்த அதிமுக கூட்டம். ஆனால், இன்று திமுக கூட்டங்களில் பிரியாணி, பீர் பாட்டில்கள் வைத்து கூட்டங்கள், விருந்து நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறது என்று குறித்த கேள்விக்கு, மற்ற விசயங்களை பற்றி நான் பேசினால், நீங்க என்ன போடுவிங்க, எப்படி போடுவிங்கன எனக்கு தெரியும் என்று பேசிச் சென்றார்.