அமித்ஷா டெல்லியில் இருந்து விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்துவிடுகிறது : நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2025, 2:23 pm

நூறு வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பில் ஏற்பட்ட பலகோடி ரூபாய் மோசடியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் சார்பில் இன்று புதூர் பேருந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார் . திமுக அரசுக்கு எதிராக வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமான பாஜகவினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பிய நிலையில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஒரு தவறு நடைபெறுகிறது என்றால் அதை சுட்டிக்காட்டுகின்ற கட்சியாக அதை தடுத்து நிறுத்தக்கூடிய கட்சியாக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற அதிமுகவும் பாஜகவும் தான் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்க: ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு காரணம் பறவைகள் அல்ல.. விபத்துக்கு முன் விமானிகள் பேசிய ஷாக் ஆடியோ!

காரணம் திமுக தலைவர் ஊரணியின் தமிழகம் வீடு வீடாக செல்கின்றனர் . தோல்வி பயம் காரணமாக ரோடு ஷோ நடத்துகின்றனர். அமித்ஷா அவர்களே பார்த்தாலே திமுகவினர் பயப்படுகின்றனர்

தமிழகத்துக்கு வருவதற்கு டெல்லியில் இருந்து விமானம் ஏறுகின்றார் என்று செய்தி கேட்டால் திமுகவினர் பயப்படுகின்றனர். தமிழக முதல்வருக்கு வேறு பணி இல்லை. ஓரணியில் காவல் நிலையத்தில் லாக்கப் டெத். ஒர் அணியில் கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

விஷ சாராயம் அருந்தி இருந்தால் 10 லட்சம் ரூபாய். வேங்கை வயல் பிரச்சனை குறித்து திருமாவளவன் ஒரு வார்த்தை கூட வாய்ப்பு இருக்கவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில் இடது கம்யூனிஸ்ட் அவ்வப்போது குரல் எழுப்புகின்றனர்

கூட்டணியில் இருந்து கொண்டு தவறு நடக்கும்போது தட்டி கேட்கிறார் என்றால் அது ஒரு நல்ல விஷயமாக தடுக்கும் அவருக்கு எனது பாராட்டுக்கள்

காங்கிரஸ் என்கின்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கின்றதா இல்லையா என்று யாருக்குமே தெரியவில்லை. ஏனென்றால் எந்த விஷயத்தை அவர் நிலையில் எடுக்கவில்லை.

காவல் நிலையம் மட்டுமல்ல கள்ளச்சாராயமாக இருந்தாலும் கூட எந்த உணவில் பிரச்சனைக்கும் அவர்கள் கையில் எடுக்கவில்லை. 2026ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்.

மதுரை எப்போதுமே பாஜகவினருக்கு ராசியான நகரம். மதுரையில் தான் அமித்ஷா அவர்கள் தலைமையில் மாநாடு நடைபெற்றது அதேபோன்று முருக பக்தர்கள் மாநாடும் நடைபெற்றது

முருக பக்தர்கள் மாநாட்டில் பல லட்சம் பக்தர்களும் பொதுமக்களும் பங்கு பெற்றனர் . அமர்ந்திருந்த நாற்காலியை கூட ஒழுங்குப்படுத்தி சென்றவர்கள் தான் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கு பெற்றவர்கள்

வேறு கட்சி கூட்டமாக இருந்தால் டாஸ்மாக் தான் சென்று இருப்பார்கள். ஆனால் முருக பக்தர் மாநாட்டிற்கு வந்த பல லட்சம் மக்கள் எங்கிருந்து வந்தார்கள் எவ்வாறு சென்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் சிறப்பான முறையில் வந்து சென்றார்கள்

மதுரை திமுகவிற்கு ராசி இல்லாத ஒரு இடம். இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. மீனாட்சி அம்மையின் ஆட்சி தமிழகத்தில் நிச்சயம் மலரும்

வீடுகளுக்கு உரிய வரி விதிப்பில் மாபெரும் ஊழல் செய்திருக்கிறார்கள். மதுரை மட்டுமல்ல சிவகங்கை மாவட்டத்திலும் திமுகவினர் இன்று ராஜினாமா செய்திருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது

திமுகவை சேர்ந்த தொழிலதிபரிடம் ஏழு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மதுரை துணை மேயர் நாகராஜன் பொதுமக்கள் நடமாடும் பாதையவே ஆக்கிரமிப்பு செய்து வீடு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது

இவ்வாறாக எதிலும் எல்லாவற்றிலும் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவற்றைப் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். இந்த மதுரை மண் சாதாரண மண் கிடையாது நீதி கேட்டு போராடிய கண்ணகி வாழ்ந்த மண் இது.

ஓரணியில் தமிழகம் என்கின்ற நிலையை மாற்றி கண்ணகி போராடிய இந்த மதுரை மண்ணிலிருந்து கூறுகிறேன் நிச்சயம் திமுகவே வீட்டிற்கு அனுப்புவோம் என்று சொல்லி தனது கண்டன உரையை நிறைவு செய்தார் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!