அவங்களை உள்ள விடாதீங்க… அமைச்சர்களை தடுத்து நிறுத்திய திமுகவினரால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan8 July 2025, 6:51 pm
புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் திமுக வடக்கு மாவட்ட பூத்கமிட்டி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திமுக முதன்மை கழகச் செயலாளரும் அமைச்சருமான கே என் நேரு ரகுபதி மெய்ய நாதன் ஆகியோரை புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளர்கள் வட்டச் செயலாளர்கள் ஆகியோர் வருகை புரிந்தனா.
இதையும் படியுங்க: அரசு கொடுத்த வேலை 80 கிமீ தூரம்.. தண்ணி இல்லாத காட்டுக்குள் வீடு : அஜித் குமார் சகோதரர் அதிருப்தி!
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை திமுக மாநகர பொறுப்பாளர் ராஜேஷ் என்பவரை மாற்றக்கோரி பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பி முற்றுகையிட்டு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் திமுக மாநகர பொறுப்பாளரை மாற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அப்பொழுது வந்த அமைச்சர்கள், புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளர்கள் மற்றும் வட்ட செயலாளர்களை அமைதிப்படுத்தி அவர்களது கோரிக்கையை திமுக தலைமைக்கு எடுத்துச் சொல்வதாக கூறினர்.
ஆனாலும் அதனை ஏற்க மறுத்த திமுக நிர்வாகிகள் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் ஆக இருந்த செந்தில் என்பவர் சமீபத்தில் மரணமடைந்ததை எடுத்து திமுக தலைமை ராஜேஷ் என்பவரை மாநகர பொறுப்பாளராக அறிவித்தது.
அவரை அறிவித்ததில் இருந்து புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளர்கள் வட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் ஆகியோர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதற்கு ஒரு பகுதியாக தான் இன்று பூத் கமிட்டி கலந்தாய் கூட்டத்திற்கு வந்த அமைச்சர்களை வழிமறித்து திமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.