பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2025, 6:55 pm

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் திமுக சார்பில் மாபெரும் பொதுகூட்டம் நடைபெற்றது.

இதையும் படியுங்க: கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலதுறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார்.

இதில் பேசிய வேளாண் அமைச்சர், நேற்று ஆரமித்த பட கம்பெனி எல்லாம் முதல்வர் கனவு காண்கிறார்கள் – இது ஒன்றும் சினிமா அல்ல இனி மக்கள. ஏமாற மாட்டார்கள் -இளைஞர்களின் கலாசாரத்தை வீணாக்குபவர் , இவர் நம்மை அகற்ற நினைக்கிறார்.

நேற்று ஆரமித்த பட கம்பெணி எல்லாம் முதல்வர் கனவு , 10 துண்டை போட்டுகொண்டு சினிமா செட்டிங் ,எல்லாம் குறிப்பிட்ட டிரண்டிங் காலம் இதையெல்லாம் தகர்க்கும் சக்தியாக நம் இளைஞர்கள் இருக்க வேண்டும் என தெரிவித்தார்

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!
  • Leave a Reply