திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2025, 10:45 am

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை கிளப்பிவிடும்.

அந்த வகையில் அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும், சைவ, வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார்.

இதையும் படியுங்க: அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

இது சர்ச்சையானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் எதிர்ப்புகளை பதிவு ய்தது. பெண்கள் மத்தியில் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

DMK Minister Ponmudi's obscene speech... Kanimozhi MP outraged

இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவர் தனது X தளப்பக்கத்தில், அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.

எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!