திமுக அமைச்சரின் அலட்சியம்.. கால்கடுக்க நின்ற பள்ளி மாணவிகள் : அதிருப்தியில் பெற்றோர்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2021, 5:00 pm
Minister Nehru -Updatenews360
Quick Share

திருச்சி : அமைச்சரை வரவேற்க தனியார் பள்ளி மாணவர்கள் கால் கடுக்க சாலையோரம் காத்திருந்த அவலம் அரங்கேறியுள்ளது.

திருச்சி துறையூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதிகளில் மழை பாதிப்புகளை பார்வையிட அமைச்சர் நேரு நேற்று சென்றார். கோட்டப்பாளையத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கூட்டத்தை அமைச்சர் நேரு திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது அமைச்சரை வரவேற்க கோட்டப்பாளையம் லூர்து அன்னை பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளை பள்ளி நிர்வாகம் ஒரு மணி நேரம் சாலையோரம் காக்க வைத்தது. இதில் பல மாணவிகள் செருப்பு கூட அணியாமல் ஒரு மணி நேரம் நின்றதை பார்த்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பரிதவித்தனர்.

உயரதிகாரிகள் வரும் போது சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவது வழக்கம் தற்போது மாறி வரும் சூழலில் ஆளுங்கட்சி அமைச்சருக்காக பிஞ்சு மாணவிகள் ஒரு மணி நேரம் கால்கடுக்க காத்திருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தான் பொது இடங்களில் வரும் போது பொதுமக்களுக்கு இடையூறு அளிக்க கூடாது என சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். அவ்வளவு பெரிய உயரதிகாரியே இந்த உத்தரவை போட்டுள்ள நிலையில், ஒரு இலாகாவின் அமைச்சர் இப்படி நடந்துகொள்வது நியாயமா?

Views: - 221

0

0