திமுக எம்எல்ஏ மரணம்.. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்.. எப்போது தெரியுமா? இது 2வது முறை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2024, 5:04 pm
Vikravandi
Quick Share

திமுக எம்எல்ஏ மரணம்.. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்.. எப்போது தெரியுமா? இது 2வது முறை!!

புகழேந்தி எம்எல்ஏவின் மறைவால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக ஒரு தொகுதியின் எம்எல்ஏ மரணமடைந்தால் அல்லது பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

அந்த வகையில் அடுத்த 6 மாதத்துக்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி பார்த்தால் செப்டம்பர் மாதத்துக்குள் ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

அப்போது ஜம்மு காஷ்மீருடன் சேர்த்து விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். ஒருவேளை ஜம்மு காஷ்மீர் தேர்தல் தேதி தள்ளிப்போனால் அக்டோபர் மாதத்தில் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் இது 2வது இடைத்தேர்தலாகும். ஏனென்றால் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திமுகவின் ராதாமணி வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். அவர் கடந்த 2019ல் காலமானார்.

அப்போது முதல் முறையாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுடன் தற்போது காலமான புகழேந்தி தோற்றார். அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளரான சிட்டிங் எம்எல்ஏ முத்தமிழ் செல்வனை வீழ்த்தி புகழேந்தி வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்று காலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 415

0

0