பெரியார், அண்ணாவை பார்த்ததில்லை… கருணாநிதியை பார்த்து வளர்ந்தவன் நான்… உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
27 June 2022, 4:15 pm
Quick Share

தஞ்சை : கட்சியின் மூத்த முன்னோடிகள் இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. முன்னோடிகள் இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் உங்களை பின்தொடர்ந்து இளைஞர்கள் அரசியல் பணியாற்றுவோம் தஞ்சையில் தி.மு.க மூத்த முன்னோடிகள் 600 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கியவர், இனி பொற்கிழியை 10 ஆயிரம் ரூபாயாக வழங்கிட வேண்டும் என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் கலைஞரின் 99வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, தி.மு.க வின் மூத்த முன்னோடிகள் 600 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் பொற்கிழியை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் உதயநிதி பேசியதாவது :- தி.மு.க வின் மூத்த முன்னோடிகளை பெரியாராக, அண்ணாவாக, கலைஞராக பார்க்கிறேன். அண்ணா, பெரியாரை நான் பார்த்ததில்லை. இங்கிருப்பவர்களில் பலர் அவர்களை பார்த்திருக்கலாம். நான் கலைஞரை பார்த்து வளர்ந்தேன். கட்சியின் மூத்த முன்னோடிகள் இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும். மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியாக இனி 10 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

இதனையடுத்து, தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், மாநகராட்சியில் பணிபுரிந்து காலமான 6 தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு 54 லட்சம் ரூபாய் பணிக்கொடையை வழங்கினார். பின்னர், சாலைகளில் சேரும் மண்ணால் விபத்து ஏற்படுவதை தடுத்திட 66 லட்சம் ரூபாய் மதிப்புடைய சாலையை தூய்மை செய்திடும் வாகனத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், தஞ்சை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தஞ்சை மேயர் துணை மேயர் உள்ளிட்போர் பங்கேற்றனர்.

Views: - 532

0

0