எம்ஜிஆர் குறித்து திமுக எம்பி ஆ.ராசா அவதூறு.. எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த அதிமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2024, 7:32 pm

எம்ஜிஆர் குறித்து திமுக எம்பி ஆ.ராசா அவதூறு.. எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த அதிமுக!!

எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 9ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

இதற்கு அதிமுகவினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறும் போது “அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான் ஆ.ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன்.

மக்களவைத் தேர்தலில் ஆ.ராசாவுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து வரும் 9ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. அவிநாசியில் காலை 9 மணிக்கு தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?