அடுத்தடுத்து பெண்களை இழிவுபடுத்தும் திமுக எம்பி ஆர்எஸ் பாரதி மீது புகார் : விரைவில் நடவடிக்கை..!!

12 February 2021, 1:07 pm
rs bharathi - updatenews360
Quick Share

சென்னை : பெண்களை இழிவுபடுத்தியதாக திமுக எம்பி ஆர்எஸ் பாரதி மீது சிவகங்கை காவல்நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெண்களை இழிவுபடுத்தியதாகவும், பட்டியலின மக்களை தரம் தாழ்ந்து பேசியதாகவும் திமுக எம்பி ஆர்எஸ் பாரதி மீது ஏற்கனவே காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழலில், பொதுவெளியில் பெண்கள் குறித்து இழிவுபடுத்தும் விதமாக, ஜெயலலிதாவை தகாத வார்த்தைகளில் பேசிய ஆர்எஸ் பாரதியின் மீது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கேஎம் கோபி சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- வாழ்ந்து மறைந்த மனித தெய்வம், மக்கள் மனங்களில் வாழும் இதய தெய்வம், அதிமுக நிரந்தரப் பொதுச்செயலாளர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கள் ஏற்படுத்தும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பேசியுள்ளார்.

இளம்பெண் குளத்தை இழிவு செய்யும் விதமாகவும், தகாத வார்த்தைகளால் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் விதமாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் கடந்த 9ம் தேதி அம்பத்தூரில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.

எனவே, பொது வெளியில் பெண்களை இழிவு செய்தல், அவதூறு பரப்புதல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுததப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பல்வேறு வழக்குகளில் சிக்கி ஜாமீனில் வந்த திமுக எம்பி ஆர்எஸ் பாரதியின் மீது தற்போது மேலும் ஒரு புகார் கொடுத்திருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 9

0

0