ஜெய்ஹிந்த்தை எதிர்க்கும் திமுக.. ஆதரவளிக்கும் காங்கிரஸ்.. இனி சட்டசபையில் ஒலிக்கும்.. அமித்ஷாவின் அடுத்த பிளான்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2021, 12:17 pm
Jaihindh - Updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது ஜெய்ஹிந்த் வார்த்தை நீக்கப்பட்டது சர்ச்சையான நிலையில் அமித்ஷா கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். இதையடுத்து ஆளுநர் மீதான உரை குறித்து பேசிய திமுக கூட்டணி எம்எல்ஏ கொங்கு ஈஸ்வரன், திமுகவின் புகழ் பாடி பேசினார்.

பின்னர் ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்று சொன்னால், சென்ற ஆளுநர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே, நன்றி, வணக்கம், ஜெய் ஹிந்த் என்று போட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆளுநர் உரையிலே அந்த ஜெய்ஹிந்த் இல்லை என்பதை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன் என கூறினார்.

வாழ்க பாரதம்னு சொல்லுங்க.. எதற்கு "ஜெய்ஹிந்த்" சொல்லனும்.. கொங்கு ஈஸ்வரன்  கொடுத்த விளக்கம்! | Kongu Eswaran explains why he oppose the word Jai hind  in governor's speech - Tamil ...

கொங்கு ஈஸ்வரன் எம்எல்எ பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நெட்டிசன்கள் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை தமிழரால் சொல்லப்பட்ட வார்த்தை, நேதாஜியால் புகழ்பெற செய்யப்பட்ட வார்த்தை, இப்போத ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது.. தேசப்பற்றை நினைவுப்படுத்துக்கிறது என கருத்துகளை முன்வைத்தனர்.

PTR, the man who will man TN finances - The Sunday Guardian Live

ஈஸ்வரன் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, ஈஸ்வரனின் கோபத்திற்கு ஈஸ்வரன் போன்றோர்கள் ஆளாக வேண்டாம் என விமர்சித்தார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

TN Assembly elections | Congress, BJP to face off in five seats - The Hindu

தமிழக காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சொன்ன ஜெய்ஹிந்த் என்ற வீடியோவை பதிவிட்டு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணியிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சென்னையில் உள்ள மத்திய உளவு அமைப்புகள், மூன்று பக்கங்கள் அடங்கிய ரகசிய அறிக்கையை அனுப்பியுள்ளனர்.

Amit Shah slams opposition for 'doing politics' over Covid-19 crisis |  Business Standard News

அந்த ரகசிய அறிக்கையில்,’கவர்னர் உரையில் முதலில் ஜெய்ஹிந்த் வார்த்தை இடம்பெற்றிருந்தது. ஆனால், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் அதை நீக்கி, முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கடும் அப்செட்டான அமித்ஷா, இனி சட்டசபை கூடும் போதெல்லாம் சகையில் ஜெய்ஹிந்த என கோஷமிடும்படி கட்சி எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தபட உள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 286

0

1