திமுக பிரமுகரின் இல்லத் திருமண விழா : தடையை மீறி வைத்த “பேனர்கள்“!!

31 August 2020, 4:41 pm
DMK Banner Issue - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : உயர்நீதிமன்ற தடையையும் மீறி திமுக பிரமுகரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் திமுக உறுப்பினர் ஒருவரின் இல்லத் திருமண விழாவிற்கு வருகை தரும் திமுக மாவட்ட செயலாளர் சுந்தரை வரவேற்க காஞ்சிபுரம் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் உயர் நீதிமன்றம் தடையை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் வெளிப்புறம் , காந்திசாலை, பொன்னேரி கரை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் உள்ளிட்ட 10 இடங்களுக்கு மேல் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

காஞ்சிபுரம் , சென்னை, திருப்பதி மெயின் ரோடுகள், தெருக்களில் பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலையீட்டு பிளக்ஸ், பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Views: - 8

0

0