இனி வீடு வீடா போகமாட்டோம்… டாஸ்மாக் தான் டார்கெட்..!! திமுக எம்எல்ஏவின் புது டெக்னிக்… ஸ்டாலின் அதிர்ச்சி !!

26 January 2021, 5:32 pm
tasmac - dmk - updatenews360
Quick Share

விருதுநகர் : சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில், திமுக எம்எல்ஏவின் புதிய டெக்னிக்கால், அக்கட்சியின் தலைமை அதிர்ந்து போயுள்ளது.

விருதுநகரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அருப்புக்கோட்டை திமுக எம்எல்ஏ கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- மதுபானக் கடைகளுக்கு மட்டுமே ஆளும் கட்சி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடைகளை மூடப் போவதாக கூறி வந்த நிலையில், 100 % கடைகளையும் திறந்து விட்டது. எனவே, திமுக இனி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக, இனி டாஸ்மாக் கடைகளின் வாசலில் அமர்ந்து குடிமகன்களிடம் வாக்கு கேட்க போகிறோம்.

KKSSR-Ramachandran - updatenews360

ஏனெனில், ஆண்கள் அதிகமாக அங்குதான் வருகிறார்கள். வேலை எளிதாக முடிந்துவிடும், எனக் கூறினார். அவரது இந்தப் பேச்சைக் கேட்டு அங்கிருந்த திமுகவினர் ஆரவாரம் செய்தனர்.

ஆனால், மதுவிலக்கு… மதுவிலக்கு என அடிக்கடி திமுக மேல்மட்ட தலைவர்கள் கூறி வரும் நிலையில், தேர்தல் சமயத்தில் மூத்த தலைவர் ஒருவர் இதுபோன்று பேசலாமா..? என கட்சியின் தலைமை அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் 29ம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரச்சாரத்தை முன்னெடுக்க இருப்பதாக ஸ்டாலின் கூறிய நிலையில், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியிருப்பதுதான் உங்களின் புதிய கோணமா..? என்று திமுகவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Views: - 0

0

0