திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்று : டாஸ்மாக் திறப்பு குறித்து பாஜக தலைவர் முருகன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2021, 1:28 pm
BJP Murugan- Updatenews360
Quick Share

திருவள்ளூர் : திமுக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய பாஜக சார்பில்
பெரியபாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் 5 படுக்கைகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பாஜக மாநில தலைவர் எல். முருகன் வழங்கினார்.

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை நலத்திட்டங்களை மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் வழங்கினர்.

பின்னர் எல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்திய அரசு ஒரு கோடி தடுப்பூசிகள் கொடுத்துள்ளதாகவும் 6 லட்சம் தடுப்பூசிகள் தற்போது வந்துள்ளதாகவும் மாவட்டங்கள் அனைத்திலும் தடுப்பூசி பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தொற்று 5 ஆயிரம் பேருக்கு பாதிக்கப்பட்டபோது டாஸ்மாக்கை திறக்கக்கூடாது என அப்போது கூறியவர்கள் தற்போது தமிழக மக்களை ஏமாற்றும் செயலாக அதனை திறக்க உள்ளது என்பது சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தில் மத்திய அரசு என்று தான் உள்ளது அதனை இயற்றிய அம்பேத்கரை இவர்கள் யூனியன் அரசு என கூறி அவமதிக்கிறார்களா என்றும் திமுக முதல்வர் ஸ்டாலினின் 30 நாட்கள் ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் தான் நடந்துள்ளது.

முரசொலிக்கு 12000 கிராமங்களில் அரசு சந்தா வசூல் செய்வது மதுபானக்கடைகளை திறக்கவுள்ளது என்பது அதிகார துஷ்பிரயோகம் தான் செய்கிறது என தெரிவித்த அவர் தேர்தல் அறிக்கையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என தெரிவித்ததையும் பெட்ரோல் டீசல் விலை 4 ரூபாய் குறைப்பு என கூறியதை நிறைவேற்ற வேண்டும் என்றும் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் சிலைகள் நகை உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும் முறையாக கணக்கெடுத்து பதிவு செய்யப்பட
வேண்டும் என்றார்.

Views: - 202

0

0