பாஜகவுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் உட்காருவதும் ஒன்ணுதான் : பரபரப்பை கிளப்பிய திமுக பேச்சாளர்!
Author: Udayachandran RadhaKrishnan22 April 2025, 4:25 pm
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது
கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் தலைமை தாங்கினார்
இதையும் படியுங்க: நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!
இக்கூட்டத்தில் பேசிய தலைமை கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மீண்டும் அடுத்த முதல்வர் 2026 ஸ்டாலின் தான் தமிழக மக்கள் நன்றி உள்ளவர்கள். 2026 ஆட்சிக்கு வரவேண்டும் என்பதல்ல எங்கள் நோக்கம் 2029-இல் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
வீழ்த்த முடியாதவர் அல்ல மோடி, அது யாரால் முடியும் என்றால் ஸ்டாலின் அவர்களால் தான் முடியும். எதிரும் புதிருமாக உள்ள கட்சிகளை நேர்கோட்டில் எடுத்து வைக்கும் ஆற்றல் அண்ணன் ஸ்டாலினிடம் உள்ளது. அவர் 55 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கை சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இன்று இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பழனிச்சாமி பிஜேபியுடன் கூட்டணி வைத்துள்ளார். ஆனால் பழனிச்சாமிக்கு தெரியாது அந்த கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் திமுகவிற்கு தான் ஓட்டு அளிப்பார்.
தமிழக கவர்னர் அடக்கு முறையை ஏவ நினைக்கிறார் உச்ச நீதிமன்றம் பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராகியுள்ளார் தமிழக முதல்வர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கேரளம் மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, காஷ்மீர் உள்ளிட்ட முதல்வர்கள் எல்லோரும் சொல்கிறேன். நாங்க எல்லாம் முதல்வர் எங்களுக்கு நீங்கள் தான் மூலவர் என்கின்றனர் இப்படி உரிமைக்காக உழைக்கும் மக்களுக்காக இருக்கும் ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.