செவிலியர் மாணவி சரஸ்வதி படுகொலை : தாமதமாக கண்டனக் குரல் கொடுக்கும் உதயநிதி…!

19 April 2021, 8:26 pm
udhayanidhi stalin - updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஐகே உள்ள தேவியாநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (19). இவரு அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இருவரின் காதலுக்கு சரஸ்வதி வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவசர அவசரமாக வேறு இடத்திலும் மாப்பிள்ளையும் பார்த்துள்ளனர்.

இந்த சமயத்தில், கடந்த 2ம் தேதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரங்கசாமி, சரஸ்வதியை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், தனது சகோதரன் மற்றும் நண்பனுடன் சேர்ந்து சரஸ்வதியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் ரங்கசாமி. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனத்தை பதிவு செய்து வருவதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சரஸ்வதி கொலை சம்பவத்திற்கு 17 நாட்களுக்கு பிறகு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “திருமணம் செய்ய மறுத்தார் என்பதற்காக உளுந்தூர்பேட்டை அருகே சரஸ்வதி எனும் இளம்பெண்ணை மூவர் சேர்ந்து கொலை செய்துள்ள வன்முறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தை மிரட்டி மாற்றிவிடலாம் என நினைப்பதும், அதற்காக கொலை வரை செல்வதும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்.

இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். சரஸ்வதியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு தருவதோடு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனி நடக்காதவாறு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

பெண் உரிமை பற்றி பேசும் திமுகவினர் சரஸ்வதிக்கு நிகழ்ந்த அநீதிக்கு இவ்வளவு தாமதமாக கண்டனம் தெரிவிப்பதா..? என்று பிற கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

Views: - 157

0

0