கோவையில் நேற்று பெய்த மழை அளவு எவ்வளவு தெரியமா? அடேங்கப்பா சராசரி பதிவு இவ்வளவா!!

17 November 2020, 12:19 pm
Cbe Rain - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவை பேரிடர் மேலாண்மை துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி நேற்று ஒரே நாளில் 209.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு:

அன்னூர் 12 மில்லி மீட்டர், கோவை விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 34.2 மில்லி மீட்டர் மழை, மேட்டுப்பாளையம் பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை, சின்னக்கல்லார் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை, வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் பகுதிகளில் 3 மில்லி மீட்டர் மழை, வால்பாறை தாலுகாவில் 2 மில்லி மீட்டர் மழை, சோலையார் பகுதியில் 15 மில்லி மீட்டர் மழை, ஆழியார் பகுதியில் 6.6 மில்லி மீட்டர் மழை, சூலூர் பகுதியில் 38 மீட்டர் மழை, கோவை தெற்கு பகுதியில் 45 மில்லி மீட்டர் மழை, பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 மில்லி மீட்டர் மழை என மொத்தம் 209.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவையில் சராசரி மழை அளவாக 14.99 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Views: - 22

0

0