அத்துமீறு என்பதற்கு அர்த்தம் தெரியுமா? அன்புமணியை விளாசிய திருமாவளவன்!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2025, 6:59 pm

பாமக சித்திர முழுநிலவு மாநாட்டில பேசிய அன்புமணி , இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு போ, பின்பு கட்சிக்கு வா, குடும்பத்தை பார் என பேசியிருந்தார்.

அத்துமீறு என்ற திருமாவளவனின் முழக்கத்தை குறிப்பிட்டு அன்புமணி பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க: வீதிக்கு வந்த வடகலை – தென்கலை மோதல் : நா கூசும் வகையில் பேசியதால் பக்தர்கள் முகம் சுழிப்பு!

இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய திருமாவளவன், அத்துமீறு என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்றே தெரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்.

தனியாளாக அத்துமீற முடியாது, அமைப்பாக இருந்தால்தான் அத்துமீற முடியும், தனியாளராக கோவிலுக்குள் நுழைய முற்பட்டால் விட மாட்டார்கள், ஆனால் அமைப்பாக திரண்டு சென்றால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது, இந்த அத்துமீறலுக்கு என்ன பொருதுள் என்பது புரியாமல் அத்துமீறி என்று சொல்லமாடேன் என சிலர் கலாய்க்கின்றனர்.

Do you know the meaning of transgression Thirumavalavan broke the Anbumani

அத்துமீறல் என்ற சொல்லுக்கு பல அரசியல் உள்ளது, இந்த முழுக்கம் ஒரு சாதிக்கு மட்டும் உரியது கிடையாது, நடக்கக்கூடாது என்றால் நடப்போம், பேசக்கூடாது என்றால் பேசுவோம், இந்த இடத்தில் நுழையக்கூடாது என்றால் நுழைவோம், எங்களுக்கும் அனைவருக்குமான உரிமைகள் உள்ளது என்பதற்கான குரல்தான் இந்த அத்துமீறு என கூறினார்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!