வாய்ப் புண் சிகிச்சைக்காக வந்த சிறுவனுக்கு சுன்னத் செய்த மருத்துவர்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2025, 2:10 pm

சென்னை மயிலாப்பூவரை சேர்ந்த விஜய் ஆனந்த் – விஜயலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகன் ஜெயவர்த்தனுக்கு வாய் பகுதியில் கட்டி உருவாகி வலி ஏற்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் தேதி மாலை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்ற பெற்றோர், மருத்துவர் முகமது உவைசியிடம் காட்டியுள்ளனர்.

இதையும் படியுங்க: தம்பிகளை காப்பாற்ற நப்பாசையில் டெல்லி போனது மண்ணோடு மண்ணாகிப் போச்சா? CM மீது இபிஎஸ் விமர்சனம்!

24ஆம் தேதி மாலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடலாம் என மருத்துவர் கூறியுள்ளார். அதன்படி சனிக்கிழமை மாலை சிறுவனனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவை சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருத்துவர்கள் சுமார் ஒரு மணி நேரம் கழித்து சிறுவனை இடுப்பில் துண்டு கட்டி அழைத்து வந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே துண்டை அவிழ்த்து பார்த்த போது, சுன்னத் செய்தது தெரியவந்தது, இது குறித்து மருத்துவரிடம் கேட்ட போது, சரியாக பதில் அளிக்காமல் தவிர்த்துள்ளார்.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர், உறவினர்களுடன் இணைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்வதாக கூறி அனைவரையும் கலைத்தனர்.

Doctor performs circumcision on boy who came for treatment of oral cancer

பின்னர் பெற்றோர் புகார் அளித்த நிலையல், மருத்துவரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுகதாரத்துறை ஆணையர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்தனர். இதையடுத்து அறுசை சிகிச்சை அறை மற்றும் ஆய்வகத்தை மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிட்டுள்ளனர்.

  • Famous actress' daughter breaks down in tears on stage at Saregamapa audition சரிகமப ஆடிஷனில் பிரபல நடிகையின் மகள்… மேடையில் கண்ணீர் விட்டு கதறிய பிரபலம்!!
  • Leave a Reply