பின்னணி பாடகர் எஸ்.பி.பி.க்கு நுரையீரல் அறுவை சிகிச்சை : மருத்துவர்கள் ஆலோசனை!!

8 September 2020, 11:19 am
SPB - updatenews360
Quick Share

பின்னணி பாடகர் எஸ்பிபிக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணயிம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் மீண்டு வர வேண்டும் என சினிமா பிரபலங்கள் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட நடிகர் நடிகைகள், பின்னணி பாடகர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு நாளும் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. சில வதந்திகளும் பரவியது, அதற்கு எஸ்.பி.பி மகன் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியட்டார். தொடர்ந்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் நேற்று பேசிய எஸ்.பி.பி சரண், தந்தைக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதாகவும், முழுவதுமாக கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக தெரிவித்தார்.

இந்த நிலையில் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு நுரையீரல் சிகிச்சை செய்ய மருத்துவமனை ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றால் பாலசுப்பிரமணியத்தின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக தமிழக சுகாததாரத்துறையின் உறுப்பு மாற்று பிரிவில் பதிவு செய்யப்பட்டுளள்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 9

0

0