‘நீ பாட்டுக்கு ஓட்டு… நான் பாட்டுக்கு உட்கார்ந்துக்கிறேன்’… பைக்கில் மூட்டை மீது அமர்ந்து பயணிக்கும் வளர்ப்பு நாய் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
14 February 2024, 7:46 pm

திருப்பூர் ரயில்வேமேம்பாலத்தில் பெண் ஒருவர் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தில் உள்ள மூட்டை மீது அமர்ந்து கொண்டு ஹாயாக வேடிக்கை பார்த்து வந்த செல்ல வளர்ப்பு நாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலைக்கவசம் அணியாமல் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வதும், பின் இருக்கையில் வைக்கப்பட்ட மூட்டையில் ஹாயாக அமர்ந்து கொண்டு செல்ல பிராணியான நாய் ஒன்று வேடிக்கை பார்த்து கொண்டே வருவதும் திருப்பூரின் பிரதான பகுதியான ரயில்வே மேம்பாலத்தில் நடைபெற்றது.

பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றபோது உடன் செல்லப் பிராணியான வளர்ப்பு நாயையும் அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் உள்ள வைக்கப்பட்டிருந்த மூட்டையின் மீது ஹாயாக அமர்ந்து கொண்ட செல்ல நாய், திரும்பி திரும்பி பார்த்து வேடிக்கை பார்த்து வருகிறது.

இதனைப் பின்தொடர்ந்து வாகனங்களில் செல்லும் நபர்கள் ஆச்சரியத்துடன் அதனை கண்டு ரசிப்பதும், வாகன ஓட்டி ஒருவர் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி ஆனது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!