குடத்தினுள் மாட்டிக்கொண்ட நாயின் தலை…வெளியே எடுக்கமுடியாமல் தவித்த பரிதாபம்: வைரலாகும் வீடியோ..!!

Author: Rajesh
20 February 2022, 5:27 pm
Quick Share

கோவை: வெள்ளலூர் சந்தைகடை பகுதியில் குடத்தினுள் நாயின் தலை மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் சந்தைகடை பகுதியில் தெரு நாய் ஒன்று தாகத்தை தணிக்க அப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் குடத்தினுள் தலையை விட்டு தண்ணீர் குடிக்க முயற்சித்துள்ளது.

அப்போது தான் தெரியும் அந்த குடத்தில் தண்ணீர் இல்லை ஓட்டையென்று, தொடர்ந்து தலையை வெளியே எடுக்கும் போது நாயின் தலை பிளாஸ்டிக் குடத்தினுள் மாட்டிக்கொண்டது. இதனையடுத்து செய்வதறியாமல் தவித்த நாய் ரோட்டில் அங்கும் இங்குமாக கண்கள் தெரியாமல் ஒடிக்கொண்டுள்ளது.

அரை மணி நேரத்திற்கு மேலாக தவித்த நாயை, அப்பகுதி மக்கள் குடத்தினுள் மாட்டிக்கொண்ட நாயை பிடித்து பத்திரமாக குடத்தை மட்டும் அறுத்து எடுத்து மீட்டனர். இந்த சம்பவத்தில் மிரண்டு போன நாய் குடத்தை அறுத்து எடுத்ததும் மின்னல் வேகத்தில் ஓடியது. தற்போது குடத்தினுள் தலை மாட்டிக்கொண்டு நாய் ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 481

0

0