“அந்த மாதிரியான ரோலில் நடிக்காதீங்க.” கோரிக்கை வைத்த ரசிகரிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன சொன்னார் தெரியுமா.?

Author: Rajesh
4 July 2022, 9:00 am

ஐஸ்வர்யா ராஜேஷ் “காக்கா முட்டை” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் இவர் பக்கம் திருப்பினார். ஒரு முன்னணி கதாநாயகி ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டுமென்றால் நடிகைகள் பெரும்பாலும் மறுப்பர். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் தயக்கமின்றி தன்னம்பிக்கையுடன் படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் முன்னணி நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். மலையாள படமான “ஜோமோண்டே சுவிசேஷங்களில்” நடிகர் துல்கர் சல்மானுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் மற்றொரு மலையாள படமான “புலிமட” படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் ரசிகர்களுடன் உரையாடும் பொழுது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்பொழுது ரசிகர் ஒருவர் நீங்கள் கவர்ச்சியாக நடிக்காதீர்கள். அது உங்களுக்கு செட்டாகவில்லை. எனவே ப்ளீஸ் கிளாமராக நடிக்க வேண்டாம் என கூறினார். அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் சரி என பதில் அளித்துள்ளார். இவரின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!