‘LAPTOP எல்லாம் கேட்காதீங்க… ஸ்கூலுக்கு என்ன வேணுமோ அதை சொல்லுங்க’ ; மேயர் பிரியாவின் பேச்சால் அதிர்ச்சியில் மாணவர்கள்..!!

Author: Babu Lakshmanan
11 August 2023, 8:38 am

“லேப்டாப் எல்லாம் கேட்காதீர்கள் பள்ளிக்கு என்ன தேவையோ கேளுங்கள்” என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை சின்னமலையில் அமைந்துள்ள மடுவின்கரை மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், மண்டலம் 13 குழு தலைவர் துரைராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை 200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரிய ராஜன் அவர்கள், அமர்ந்திருந்த மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்பொழுது மாணவர்கள் நன்றாக படிக்கிறீர்களா..? எனவும், தங்களுக்கு என்ன வசதி வேண்டும் என பல்வேறு வினாக்களை எழுப்பினார். அதற்கு மாணவர்கள் பதில் அளித்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் ஒரு மாணவன் லேப்டாப் எப்பொழுது வழங்குவீர்கள் என்று கேட்டதற்கு, ‘லேப்டாப் எல்லாம் இப்போது வேண்டாம், பள்ளிக்கு என்ன தேவையோ, அதை முதலில் கேளுங்கள்,” என்று பதில் அளித்தார். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?