வருத்தப்படற சீன் எல்லாம் போடாதீங்க.. ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பி கொடுங்க : ஞானவேல்ராஜாவுக்கு சமுத்திரக்கனி சம்மட்டியடி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2023, 2:10 pm

வருத்தப்படற சீன் எல்லாம் போடாதீங்க..ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பி கொடுங்க : ஞானவேல்ராஜாவுக்கு சமுத்திரக்கனி சம்மட்டியடி!!

பருத்திவீரன் திரைப்படம் குறித்து இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இடையே நடைபெற்று வரும் பிரச்சனை தமிழ் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞானவேல் ராஜாவின் கருத்துக்கு கருத்துக்கு நடிகர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன் மீது இயக்குநர் அமீர் சுமத்திய குற்றச்சாட்டுகள் தன்னை மிகவும் காயப்படுத்தியாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் போது இயக்குநர் அமீரின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஞானவேல் ராஜாவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சமுத்திரக்கனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கின்ற சீனெல்லாம் இங்கு செல்லாது’ என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த கேவலமான இண்டெர்வியூவை சமூக வலைத்தளங்களில் இருந்து துடைத்து எறியவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் அவர் கூறியிருந்ததாவது, ‘எந்த பொதுவெளியில் எகத்தாளமாக உட்கார்ந்து கொண்டு, அருவெறுப்பான சேரை வாரிஅடித்தீர்களோ , அதே பொது வெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். மேலும், ‘பருத்திவீரன் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் சம்பள பாக்கி இருக்கிறது, பாவம் அவர்கள் எல்லாம் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் உங்களை போல அல்ல’ என்று தெரிவித்திருந்தார்.

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?