பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை அணியக்கூடாதா? வலுத்த எதிர்ப்பு.. உத்தரவை திரும்பப் பெற்ற பெரியார் பல்கலை.,!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2023, 8:11 pm

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கவர்னர் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.

இதனிடையே, முன்னதாக பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில், விழாவில் அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்துவருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்துவருவதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து உத்தரவை பல்கலைக்கழக நிர்வாகம் திரும்பப் பெற்றது. மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களது நலனை கருத்தில் கொண்டு சுற்றறிக்கை திரும்ப பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?