அரசு விழாவில் அதிகாரிகளுக்கு டோஸ்… குத்துமதிப்பாக பதில் சொன்ன அதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2023, 4:16 pm

விழுப்புரத்தில் உள்ள சாலாமேடு பகுதியில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டிடம் ரூபாய் 3 கோடியே 72 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது.

இதற்கான பூமி பூஜையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் மேடையில் பேசுவதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது தொழிலாளர் நலத்துறை அலுவலக அதிகாரிகளிடம் எத்தனை தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு எத்தனை உள்ளது என்ற கேள்வி கேட்டார்.

அதற்கு அதிகாரிகள் எதுவும் தெரியாது என கூறியதோடு குத்து மதிப்பாக 100 பேர் என்று பெண் அதிகாரி தெரிவிக்க உடனே பெண்ணதிகாரியை பார்த்து போ என்று தெரிவித்தார்.

மேலும் மேடையிலேயே அமைச்சர் பொன்முடி அதிகாரிகளை டோஸ் விட்ட சம்பவம் அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?