திராவிடத்தால் அழிந்து வரும் தமிழ் … ராமதாஸின் அறிவிப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் : எச்.ராஜா!!

Author: Babu Lakshmanan
28 January 2023, 4:24 pm

கடலூர் : தமிழை தேடி யாத்திரை செல்லுவதாக மருத்துவர் இராமதாஸ் அறிவித்திருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கடலூரில் நேற்று தனியார் திருமண மஹாலில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடைபெற்றது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் இன்று சிவனடியார்கள் திருமடங்களின் ஆதினங்கள், மடாதிபதிகள் மற்றும் பக்திமார்க்க பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

சுவாமி ராமானந்தா தலமையில் நடைபெற்ற இவ்விழா, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜன் சம்பத் அவர்கள் சிறப்புரையுடன் துவங்கியது. ஜனாதன இந்து தர்ம எழுச்சி மாநாட்டில் மன்னார்குடி ஜியர் அவர்களும், மலேசியா ராமானந்த சுவாமி, வள்ளிமலை சாமி சிவானந்த வாரியர் மற்றும் சிறப்பு விருந்தினராக BJP கட்சியின் மூத்த அரசியல்வாதி H.ராஜாவும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். ஜாதிமத பேதமின்றி ஜனாதன தர்மத்தை கடைபிடிக்கும் கருத்தை மையப்படுத்தி பேசினார்.

பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் H.ராஜா அவர்கள் கூறியதாவது :- தமிழ்நாட்டில் தமிழை தேடி யாத்திரை என மருத்துவர் இராமதாஸ் ஜயா அவர்கள் கூறியதற்கு மனமார்ந்த பாராட்டுதல்கள். மருத்துவரை நேரிலும் இது தொடர்பாக சந்திப்பேன். திராவிடத்தால் தமிழ் முற்றிலும் அழிந்து வருகிறது.

ஈரோடு பாஜக வேட்பாளர் குறித்த கருத்துக்கு 31ந் தேதி நடைபெறும் பாஜக மைய குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும், எனக் கூறினார். அதிமுக ஓபிஎஸ் – இபிஎஸ் அணி ஒன்று சேருமா என்ற கேள்விக்கு..? அது பகவானுக்கு மட்டுமே தெரியும், என்று வானத்தை பார்த்து கூறினார்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!