டாய்லெட் போனது குத்தமா?… ஏய் .. ஏய்.. வண்டியை நிறுத்து.. ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் அஜாக்கிரதையால் நடந்த சம்பவம்..!

Author: Vignesh
2 August 2024, 6:58 pm
Quick Share

கோவை சேர்ந்தவர் சண்முகம் மற்றும் கஸ்தூரி தம்பதியினர் இவர்கள் உதகையில் இருந்து கோவை வந்து உள்ளனர்

இந்த நிலையில் அரசு பேருந்து பர்லியார் அருகே நின்ற போது பயணிகள் டாய்லெட் சென்று உள்ளனர். அப்போது கஸ்தூரி மற்றும் குழந்தை டாய்லெட் சென்று விட்டு அரசு பேருந்தில் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின்னர் சண்முகம் அந்த டாய்லெட்டுக்குச் சென்று உள்ளார்.அந்த நேரத்தில் பேருந்தை ஓட்டுனர் வாகனத்தை அங்கு இருந்து எடுத்து உள்ளார் பேருந்தில் அமர்ந்து இருந்த கஸ்தூரி சில நிமிடம் நிறுத்துங்கள் எனது கணவர் வந்துவிடுவார் எனக் கூறியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் எதையும் கேட்காமல் வாகனத்தை பர்லியாரு பகுதியில் இருந்து எடுத்துச் சென்று விட்டனர்.சண்முகம் அதன் பிறகு வந்த அரசு பேருந்தில் ஏறி வந்து இந்த வாகனத்தை பிடித்து உள்ளார். ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கவனக்குறைவால் இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் என்னிடம் பணம் அல்லது போன் இல்லை என்றால் நான் என்ன செய்வது என ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • Wayand Shruti இப்படி ஒரு பெருந்துயரம் யாருக்கும் வந்துவிடக்கூடாது.. நிலச்சரிவும்.. விபத்தும் : உருக்குலைந்த கேரளப் பெண்!!
  • Views: - 139

    0

    0