அரசு பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. தப்ப முயன்ற சித்த மருத்துவரை லாக் செய்த ஓட்டுநர்!
Author: Udayachandran RadhaKrishnan24 July 2025, 4:54 pm
திருவள்ளூரில் அரசு பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறிய நடக்க முயன்ற சித்த மருத்துவரை சாமர்த்தியமாக பேருந்தை லாக் செய்து சிக்க வைத்த ஓட்டுநர்
இரவு 8:30 மணிக்கு திருவள்ளூரில் இருந்து ஸ்ரீ பெருமந்தூர் வரை செல்லும் 538A
மாநகரப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ஆத்து மீறி நடக்க முயன்றதால் அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார் அரக்கோணத்தில் சித்த மருத்துவராக பணிபுரியும் ஸ்ரீ பெரும்புதூரை சார்ந்த மதி தப்பிக்க முயன்றுள்ளார்.

உடனே கூச்சல் சத்தம் கேட்டதும் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பேருந்து இரண்டு பக்க கதவுகளையும் லாக் செய்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபரை காவலர்கள் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
