சாலையில் உள்ள குழியால் நிலை தடுமாறிய வாகன ஓட்டி : அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி!!(வீடியோ)
Author: Udayachandran RadhaKrishnan1 November 2021, 5:52 pm
சென்னை : சாலையில் ஏற்பட்ட படுகுழியால் தடுமாறிய வாகன ஓட்டி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா சாலை எப்போதும் பரபரப்பாக அதிகமான வாகனங்கள் செல்லும் ஒரு சாலையாகும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சாலையில் எந்நேரமும் கவனமுடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
அதே சமயம் மோசமான சாலையில் சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இது குறித்து முறையாக புகார் கொடுத்தும் அதிகாரிகள் மெத்தனமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த வாலிபர் ஒருவர் சாலையில் உள்ள குழியால் நிலை தடுமாறி அருகே சென்ற அரசுப்பேருந்து மோதி உயிரிழந்தார்.
முகமது யூனஸ் என்ற 32 வயதே ஆன மென்பொறியாளர் அரசு பேருந்தில் மோதி சக்கரத்தில் சிக்கி பரிதாப உயிரிழந்தார்,. இந்த காட்சிகள் அச்சாலையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி தற்போது வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோசமான சாலைகளை உடனே சரி செய்ய வேண்டி அப்பகுதியினர் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அநியாயமாக உயிர் பறிபோனதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
0
0