பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காத வாகன ஓட்டி : தட்டிக் கேட்ட ஊழியரை தட்டி தூக்கி தப்பி சென்ற இளைஞர்… பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2022, 6:57 pm

விழுப்புரம் : பெட்ரோல் நிரப்பிய வாகனத்திற்கு பணம் கேட்டதால் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விழுப்புரம் அடுத்துள்ள முண்டியம்பாக்கம் அருகே இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த ராகுல் (வயது 19) என்பவர் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6.45 மணியளவில் விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 23) என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.

இதனை அடுத்து ஊழியர் ராகுல் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜய் பெட்ரோல் பங்க் ஊழியர் ராகுலை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் ராகுல் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் கேட்டதற்கு பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?