முதலமைச்சர் வருகை : கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை

Author: Aarthi Sivakumar
21 November 2021, 3:53 pm
Quick Share

கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருவதை முன்னிட்டு மாநகர பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

கோவையில் நாளை அரசு சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை கோவை வருகிறார்.

இதனை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநகர எல்லைக்குள் ட்ரோன் கேமரா பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது,

தமிழக முதலமைச்சர் 22, 23 ஆகிய தேதிகளில் கோவை வருகிறார்.இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கண்ட தினங்களில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும், மாநகர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Views: - 231

0

0