“வீரப்பனுக்கே ஆயுதம் சப்ளை செஞ்சவங்க நாங்க..!” : போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிகள்..!

6 July 2021, 5:32 pm
Drunkers Police 1 - Updatenews360
Quick Share

கோவை : டாஸ்மாக் கடையில் ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்களை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசாரை வசைபாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், மணிகண்டன். இருவரும் நீண்ட நாள்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்ட காவல் துறையினர், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கு அமர வைத்துள்ளனர். காவல் நிலையத்திலும் ரகளையில் ஈடுபட்ட அவர்கள், அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர்.

இதையடுத்து அவர்களை காவல் துறையினர், மடக்கிப் பிடித்தனர். பின்னர், காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்களை எச்சரித்தபோது, நாங்கள் என்ன திருட்டில் ஈடுபட்டோமா? என எதிர் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

பின்னர் “பப்ளிசிட்டிக்காக போலீஸ் இப்படி பண்ணுது” என காவல் துறையினரை கலாய்த்த இருவரும், ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதன் உச்சகட்டமாக குடிபோதையில் இருந்த இளைஞர், வீடியோ எடுக்கும் காவலரை பார்த்து “வீரப்பனுக்கு ஆயுதங்கள சப்ளை செய்ததே நாங்க தான் சார்” என கலாய்த்துள்ளார்.

தொடர்ந்து அவசர ஊர்தியை வரவழைத்த காவல் துறையினர், போதையில் அலப்பறை செய்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 183

0

0