போதைப்பொருள் விவகாரம் : ஒரு வாரத்தில் 276 பேர் கைது.!

9 July 2021, 9:39 pm
Quick Share

கோவை: சட்டவிரோதமாக மது விற்பனை, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் 276 பேரை ஒரு வாரத்தில் கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் சட்ட விரோதமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரு வாரத்தில் 276 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பது:- கோவை மாநகரில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், விபச்சாரம் நடத்துபவர்கள் மற்றும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது
செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விபரம் பின்வருமாறு:-

1) 22 கஞ்சா வழக்குகளில் 38 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு
அவர்களிடமிருந்து 30.650 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

2) 3 போதை மாத்திரை வழக்குகளில் 12 குற்றவாளிகள் கைது
செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 713 போதை மாத்திரைகள் மற்றும்
உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி குற்றவாளிகளுக்கு
மருத்துவர் அனுமதி இல்லாமல் மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை
விற்ற மருந்து கடை உரிமையாளரை கைது செய்து நீதிமன்ற
காவலுக்கு அனுப்பப்பட்டது.

3) விபச்சாரம் நடத்தியதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4) சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 213 நபர்கள் கைது செய்யப்பட்டு,
அவர்களிமிருந்து 5601 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கள்ளச்சாராயத்தை வீட்டில்
காய்ச்சிய இருவர் மற்றும் கள் விற்ற ஒருவர் ஆகியோர் உட்பட
அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் பற்றி கோவை மாநகர காவல்துறைக்கு தகவல்கள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. கோவை மாநகர காவல்துறையை தொடர்பு கொள்ள 0422-2300970, 94981-81213 என்ற எண்களில் தொலைபேசி மூலமாகவும், 81900-00100 என்ற எண்ணில் வாட்ஸப் மூலமாகவும், மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்க விரும்புவோர் [email protected] என்ற முகவரியிலும்,

சமூக வலைதளங்களில் தொடர்பு கொள்ள twitter – @policecbecity வழியாகவும், Facebook – @cbecitypoliceofficial மூலமும் காவல்துறைக்கு தகவல்கள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்களின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். மேற்படி தகவல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 108

0

0