கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை : இரு இளைஞர்கள் கைது!!

10 September 2020, 1:41 pm
Nagercoil Kanja - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கல்லூரி மாணவர்களுக்காக சொகுசு காரில் கஞ்சா கடத்த முயன்ற 2 இளைஞர்கள் கைது செய்த போலீசார் இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கால் வீட்டில் முடங்கி உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரிநாத் க்கு தொடர்ந்து புகார் வந்து கொண்டு இருந்தது.

இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கருங்கல் காவல் நிலையத்நிலைய காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது சொகுசு வாகனம் நிற்காமல் சென்றது. விரட்டி சென்று வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சிறு சிறு பொட்டலங்களில் பதுக்கி வைத்திருந்த இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டதுடன் மாங்கரை பகுதியை சேர்ந்த அஜித் (வயது 21), மார்த்தாண்டம் சாகர் (வயது 23) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Views: - 19

0

0