கனமழையால் முருங்கை விலை கடும் சரிவு : ஒரு கிலோவே இவ்வளவுதானா?

26 September 2020, 1:50 pm
Drumstick - updatenews360
Quick Share

திருப்பூர் : கடந்த வாரத்தில் பெய்த மழை காரணமாக முருங்கை மரத்தில் பூக்கள் உதிர்ந்து வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், முத்தூர், மூலனூர் குண்டடம் பகுதிகளில் நடப்பாண்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்துள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் முருங்கைக்காய்கள் உள்ளூர் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு மும்பை, கல்கத்தா போன்ற வடமாநில நகரங்களுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

செடி முருங்கைக்கு தற்போது அறுவடை சீசனாகும். கடந்த 20 நாட்களுக்கு முன்பே சீசன் தொடங்கி காய்வரத்து தொடங்கியது. அப்போது பரவலாக மழை பெய்ததால் செடிகளில் பூக்கள் உதிர்ந்து மகசூல் கணிசமாக குறைந்து போனது.

மரத்தில் பூக்கள் அதிகம் இருந்த நிலையில், கடந்த வாரங்களில் பெய்த மழை மற்றும் தற்போது வீசும் காற்று காரணமாக மரத்தில் இருந்து பூக்கள் உதிர்ந்துள்ளது. பூக்கள் உதிர்ந்த காரணத்தினால் காய்கள் பிடிக்காததால், முருங்கை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலையும் குறைவாக உள்ளது, கிலோ 30க்கு விற்பனையாகிறது. விலை கிலோ ரூ.60 க்கு விற்பனை ஆனால் மட்டுமே தங்களுக்கு கட்டுபடியாகும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.