குடிபோதையில் அதிவேகமாக சரக்கு வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர்… நேருக்குநேர் மோதியதில் 2 பேர் பலி : நையப்புடைத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்…!!

Author: kavin kumar
13 January 2022, 4:27 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மதுபோதையில் அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட சரக்கு வாகனம், இருசக்கர வாகனம், கார் மீது அடுத்தடுத்து நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகே காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலை வழியாக மதுராந்தகத்தில் சேர்ந்த வெற்றி கரிகாலன் என்பவர் ஈச்சர் வாகனத்தை மிக வேகமாக நேற்று ஓட்டி வந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் பாலூர் கிராமத்தை சேர்ந்த ரவி மற்றும் முனுசாமி ஆகிய இருவரும் ஆத்தூர் அருகே தனியார் வங்கி முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு நண்பர் ஒருவர் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் ஈச்சர் வாகனத்தை ஓட்டி வந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த வெற்றி கரிகாலன் என்பவர் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி எதிரில் வந்த கார் மீதும் மோதியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முனுசாமி மற்றும் ரவிக்குமார் ஆகிய இருவரும் சுமார் 10 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முனுசாமி உயிரிழந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து மற்றொருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று ரவிக்குமார் என்பவரும் உயிரிழந்தார். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோட முயன்ற சரக்கு வாகன ஓட்டுநரை பிடித்து தர்ம அடிகொடுத்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் வெற்றி கரிகாலன் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 212

0

0