போதையில் ஆள் மாற்றி கொலை : ராமநாதபுரத்தில் இருந்து கோவை வந்து சரணடைந்த குற்றவாளிகள்!!

30 November 2020, 4:36 pm
Cbe Murder - Updatenews360
Quick Share

கோவை : ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசாரால் தேடபட்டு வந்த கொலை குற்றவாளிகள் 3 பேர் இன்று கோவை சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியில் உள்ள அந்தோனியார் சர்ச் அருகில் வசித்து வருபவர்கள் முருகானந்தம்(வயது 39), சண்முகவேல் (வயது 40). இவர்கள் இருவரும் முன்விரோதம் காரணமாக வேலுச்சாமி என்பவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இதற்காக கடந்த வாரம் 21ஆம் தேதி மது அருந்திவிட்டு வேலுச்சாமியை  கொலை செய்வதற்காக காத்திருந்தனர். அப்போது வேலுச்சாமி போல தோற்றத்தில் இருந்த வேறு ஒரு நபரை கொலை செய்துவிட்டனர்.

சண்முகம்

கொலை செய்த பின்னர் தாங்கள் வேலுச்சாமி யை  கொலை செய்யவில்லை என்பதை அறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பி கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தங்களது நண்பர் தர்மா என்பவரது வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலையான நபர் அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பது தெரியவந்தது.

மனோஜ் என்பவரை கொலை செய்தது யார் என்பது குறித்து ராமேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த முருகானந்தம், சண்முகவேல் மற்றும் அடைக்கலம் கொடுத்த அவரது நண்பர் தர்மா ஆகிய 3 பேரும் இன்று காலை கோவை சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர்.

தர்மா (அடைக்கலம் கொடுத்தவர்)

சரணடைந்த 3 பேரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சாய்பாபா காலனி போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் மூன்று பேர் சரண் அடைந்தது தகவல்களை ராமேஸ்வரம் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.

Views: - 25

0

0