டாஸ்மாக் கடையில் பேருந்தை நிறுத்த கூறி குடிகார பயணி அடாவடி : கண்ணாடி உடைத்து அட்டூழியம்!!

16 January 2021, 4:49 pm
Bus Mirror Borken - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : டாஸ்மாக் கடையில் அரசு பேருந்தை நிறுத்த மறுத்ததால் குடிபோதை பயணி பேருந்து மறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13ம் தேதி போகிப் பண்டிகை தினத்தன்று பல்லாவரத்தில் இருந்து பழந்தண்டலம் சென்ற அரசு பேருந்தை (தடம் எண் 55A) திருமுடிவாக்கம் ஊருக்கு வெளியே இருக்கும் டாஸ்மாக் கடை வாசல் முன் நிறுத்துமாறு அப்பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் கூறியுள்ளார்.

அதற்கு ஓட்டுநர் மறுத்து பேருந்தை டாஸ்மாக் வாசலில் நிறுத்தாமல் திருமுடிவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தியதால் கோபமடைந்த அந்த நபர் இறங்கி பேருந்தை மறித்தவாறு நின்று கொண்டு பேருந்தின் கண்ணாடி மீது பெரிய கல்லை வீசி உடைத்திருக்கிறார்.

இச்சம்பவம் நடைபெற்ற போது பயணிகள் முன்பக்கம் இல்லாததால் பயணிகளுக்கு சேதம் ஏற்படவில்லை.
டாஸ்மாக் கடை முன் பேருந்தை நிறுத்தத்தால் ஆத்திரமடைந்து கண்ணாடியை உடைத்த நபர் திமுக தொழிற்சங்க நிர்வாகியின் உறவினர் என சொல்லப்படுகிறது.

Views: - 8

0

0