போதையில் இளைஞர்கள் ரகளை.. சண்டையை தடுக்க சென்ற இளைஞர் படுகொலை..!
Author: Udayachandran RadhaKrishnan12 July 2025, 6:47 pm
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை பகுதியைச் சார்ந்தவர் கார்த்திகேயன் இவருக்கு சந்தியா என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்
கார்த்திகேயன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் வழக்கம்போல் இன்று வேலை முடிந்து ஈக்காடு கண்டிகை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு கார்த்திகேயன் வந்துள்ளார்
இதையும் படியுங்க: உங்க வீட்டு அக்கா, தங்கச்சி இருந்தா இப்படி தா செய்வீங்களா? ரிதன்யா தந்தை கண்ணீர்!
இந்த நிலையில் இளைஞர்கள் சிலர் கார்த்திகேயன் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி உள்ள உறவினர் வீட்டின் அருகே இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்ததை உறவினர்கள் தட்டி கேட்டுள்ளனர்.
இதனால் மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்களுக்கும் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உறவினர்களுடன் போதை இளைஞர்கள் தகராறில் ஈடுபடுவதை கார்த்திகேயன் வீடியோ எடுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மது போதை இளைஞர்கள் கார்த்திகேயனை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் ஏற்பட்ட தகராறில் கார்த்திகேயனை மது போதை இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படும் நிலையில் காயமடைந்து மயக்க நிலையில் இருந்த கார்த்திகேயனை மீட்ட அவரது உறவினர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்

பின்னர் அவரை சோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை அடுத்து அவரின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள புள்ளரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தனது உறவினர்களுடன் மது போதை ஆசாமிகள் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
