குடிபோதையில் பெண் போலீசாருக்கு பளார்… கோவில் திருவிழாவில் அடாவடி செய்த இளைஞர் கைது!!

Author: Babu Lakshmanan
3 May 2024, 7:10 pm

ஆம்பூர் அருகே கோவில் திருவிழாவில் குடிபோதையில் இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டதை தடுத்து நிறுத்திய பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமச்சந்திராபுரம் பகுதியில் எட்டியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவானது, இரண்டு தினங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று திருவிழாவை ஒட்டி மாலை ஆலய திடல் அருகே மெல்லிசை கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க: டூவீலருக்கு 28% ஜிஎஸ்டி வரி தேவையா..? மத்திய அரசு மீது ராஜீவ் பஜாஜ் கடும் விமர்சனம்..!!!

இதில் வாலிபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனை அங்கு உமராபாத் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் லட்சுமி பாதுகாப்பு பணியில் இருந்த போது, அவரிடம் தகராறு செய்யாமல் ஓரமாக இருக்குமாறு கூறியுள்ளார். அப்போது, அந்த போதை இளைஞர் எதிர்பாராத விதமாக, உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டு, அவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், அவர் தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கணேசன் (28) என்பவர் என தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயில் திருவிழாவின் போது நடைபெற்ற இன்னிசை கச்சேரியில் போதை இளைஞர் பெண் உதவி காவல் ஆய்வாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • One Dead in Pushpa 2 Stampedeகாவு வாங்கிய புஷ்பா 2… திரையரங்கில் தாய் பலி.. 9 வயது மகன் கவலைக்கிடம்!
  • Views: - 537

    0

    0